காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப்பொருள்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M. சுதாகர் அவர்களின் உத்தரவின்படி, காஞ்சிபுரம் உட்கோட்டம், காவல்துணைக் கண்காணிப்பாளர் திரு.ஜீலியஸ் சீசர், அவர்கள் அறிவுரையின் பேரில் காஞ்சிதாலுக்கா காவல் ஆய்வாளர் திரு.இராஜகோபால் . உதவி ஆய்வாளர்கள் திரு.இராஜமாணிக்கம் ( காஞ்சிதாலுக்கா ), திரு.கிருஷ்ணமூர்த்தி ( சிவகாஞ்சி காவல்நிலையம் ) மற்றும் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள தாமரைத்தாங்கல் என்ற பகுதியில் இருந்த குடோன் மற்றும் வாகனங்களை சோதனையிட்டபோது. ரூ.24,31,000 / – மதிப்புடைய குட்கா பொருட்கள், ரூ.5.55,000/- மதிப்பிலான மின்சாதனப்பொருட்கள் மற்றும் மேற்படி 2 – கனரக லாரிகள், TATA Ace மற்றும் இருசக்கரவாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு எதிரிகள்
1 ) பழனிவேல் வயது 33, மற்றும் 2) சசிகுமார் வயது 40. சென்னை ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைதுசெய்த உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்