தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன் மேற்பார்வையில் குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. ராமகிருஷ்ணன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. குணசேகரன், தலைமையிலான ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட தனிப்படை போலீசார் (29.11.2022) குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பணிக்க நாடார் குடியிருப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது. அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் ஆறுமுகநேரி மேல நவலடிவிளை பகுதியை சேர்ந்த ஹரிராமன் மகன் பாலகிருஷ்ணன் (42), சாத்தான்குளம் மாணிக்கவாசகபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சேர்மதுரை (35), ஆறுமுகநேரி பூவரசூர் பகுதியை சேர்ந்த காசி மகன் சத்தியராஜ் (35), மற்றும் நாசரேத் நல்லன்விளை பகுதியை சேர்ந்த செல்லையா மகன் குமார் (48), ஆகியோர் மேற்படி வாகனங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் குற்றவாளிகளான பாலகிருஷ்ணன். சேர்மதுரை. சத்தியராஜ். மற்றும் குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 2. 26.000/- மதிப்புள்ள 446 கிலோ புகையிலை பொருட்கள் 2 கார்கள் 2 இருசக்கர வாகனங்கள் 4 செல்போன்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூபாய் 13,000/- ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.