தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு பால் கடையில் இன்று 10.12.2022 காலை கடையில் வேலை பார்க்கும் நபர், பால் எடுக்க உள்ளே சென்று திரும்பி வந்து பார்த்தபோது கடையின் கல்லாப் பெட்டியில் இருந்த ரூபாய் 17,000/- பணம் திருடு போனது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பால் கடையின் உரிமையாளரான ஏரல் பெரிய தெருவைச் சேர்ந்த ஜெய கோவிந்தன் மகன் ஜெய தனபாண்டியன் 38 என்பவர் அளித்த புகாரின் ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. இம்மானுவேல் ஜெயசேகர் மற்றும் போலீசார் உடனடியாக மேற்படி கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலம் பணத்தை திருடிய நபரின் அடையாளம் கண்டறிந்து ஏரல் பேருந்து நிலையத்தில் மேற்படி அடையாளத்துடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் சிவகாசி EB காலனியைச் சேர்ந்த தினகரன் மகன் ஆசீர்வாதம் 52. என்பதும் அவர் மேற்படி பால் கடையில் ரூபாய் 17,000/- பணத்தை திருடியதும் தெரியவந்தது.
உடனடியாக மேற்படி போலீசார் குற்றவாளி ஆசிர்வாதத்தை கைது செய்து அவரிடம் இருந்த திருடப்பட்ட ரூபாய் 17,000/- பணத்தையும் பறிமுதல் செய்தனர்.