தூத்துக்குடி: சட்டவிரோதமாக யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. சங்கர் தலைமையில், தலைமைக் காவலர் திரு. சரவண ரமேஷ் மற்றும் காவலர் திரு. பிரதீப் ஆகியோர் இன்று (03.11.2020) காலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணஷ் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அவ்வழியாக வேகமாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்களை சந்தேகத்தின்பேரில் விசாரனை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் கணேசபுரம் ஜார்ஜ்ரோடு பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் ராஜவேல் (33) மற்றும் கணேசன் காலணி 3வது தெருவைச் சேரந்த மாயாண்டி மகன் முனியசாமி (43) என்பதும் அவர்களது இருசக்கர வாகனங்களில் சட்டவிரோதமாக 4 யானை தந்தங்கள் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜவேல் மற்றும் முனியசாமி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 4 யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர்.
மேற்படி துரிதமாக செயல்பட்டு சட்டவிரோதமாக யானை தந்தங்களை வைத்திருந்த இருவரை கைது செய்தும், அவர்களிடமிருந்த தந்தங்களை பறிமுதல் செய்த தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சங்கர் தலைமையிலான போலீசாரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.
நமது குடியுரிமை நிருபர்
G. மதன் டேனியல்
தூத்துக்குடி