திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சிலாத்திகுளம் பகுதியை சேர்ந்த கந்தசாமி (36), என்பவருக்கு தொலைபேசியில் வந்த குறுஞ்செய்தியில் மாத வாடகைக்கு டவர் வைப்பதாக வந்துள்ளது. அதை நம்பி கந்தசாமி தவணை முறையில் பணத்தை செலுத்தி ஏமாந்துள்ளார். இந்நிலையில் கந்தசாமி பணத்தை மீட்டுத்தருமாறு மனு அளித்ததன் பேரில் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜு, அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.ராஜ் அவர்கள், உதவி ஆய்வாளர் திரு.ராஜரத்தினம், அவர்கள் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு
உடனடியாக கந்தசாமி என்பவருடைய ரூபாய் 1 இலட்சத்து 50 ஆயிரம் பணத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் பணத்தின் உரிமையாளரிடம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.