ராமநாதபுரம் : சமீபத்தில்,ராமநாதபுரத்தில் திருட்டுத்தனமாக மது விற்ற வரிடம் சாதாரண உடையில் போன எஸ்பி, நான் கேணிக்கரை போலீஸ் மாமூல் தராமல் சரக்கு விற்கிறீர்கள் , என்று மிரட்டி இருக்கிறார். சரக்கு யாவாரி பஜார் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாமூல் கொடுக்கிறோம் உங்களுக்கு எப்படி தரமுடியும் என்று கேட்டிருக்கிறார்.
அதோடு பஜார் ஸ்டேஷன் அதிகாரிக்கும் போன் போட்டு மாமூல் கேட்டு ஒருத்தர் வந்திருக்கிறார் என்று சொல்லிட்டாரு …
கோபமான பஜார் அதிகாரி போனை அவர்கிட்ட குடுயான்னு சொல்லி…. ஏரியா லிமிட்ட தாண்டி வந்துகிட்டு இருக்கிங்க… என்று மிரட்டி இருக்கிறார். உடனே நான் எஸ்பி பேசுறேன் என்று சொன்னது நடுங்கிப் போன அந்த அதிகாரி மன்னிப்பு கேட்டிருக்கிறார். அவரை கடுமையாக எச்சரிக்கை பண்ணி இனி உங்க மேல புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்தார் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி வருண் குமார் ….
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்