ராமநாதபுரம் : ராமநாதபுரம் காவல்துறையில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி திரு.நாகநாதன் அவர்கள் (06.02.2023),-ம் தேதி இறைவனடி சேர்ந்தார். சமீபத்தில் காவல்துறை தலைமை இயக்குனரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை குறிப்பாணையின்படி, காவல்துறைக்கு அவர் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக , இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.தங்கதுரை அவர்களின் அறிவுறுத்தலின் படி R.S.மங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் சார்பாக மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.