ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மருத்துவமனை எதிரே, பாண்டிச்சேரி இருந்து கடத்தி வரப்பட்ட, சுமார் 1192 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக, தேர்தல் பறக்கும் படையினர் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் கமுதி காவல் உதவி ஆய்வாளர் திரு. செல்வராஜ், காவலர் திரு.சிவமணி மற்றும் தேன்மொழி ஆகியோர் சோதனையிட்டதில் அங்கு மது பாட்டில்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து குருநாதன் மற்றும் காளிமுத்து ஆகிய இரண்டு பேரை தேர்தல் பறக்கும் படையினர் உத்தரவின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் கைது செய்து சிறையில் அடைத்தார். 1192 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நாளை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி வாக்காளர்களுக்கு வினியோகிக்க பதுக்கி வைத்திருப்பதாக தெரிகிறது.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்