ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கந்துவட்டி தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்களை மாவட்ட எஸ்பி கார்த்திக் வெளியிட்டு உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், கந்துவட்டி தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், கந்துவட்டிவழக்குகளை கையாளவும் டிஜிபி சைலந்திர பாபு அறிவுரைபடி ஆபரேஷன் கந்துவட்டி தொடங்கப்பட்டு, அதிக வட்டி வசூல் தடை சட்டம் 2003-ன் படி உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் கந்துவட்டி என்ற பெயரில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி கந்து வட்டி கும்பல்களால் மிரட்டப்படுபவர் கந்துவட்டி தொழில் செய்பவர் தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலோ, நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.புகார்கள் தொடர்பான விசாரணை உடனுக்குடன் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தகவல் தெரிவிப்பவர் பற்றிய விபரங்கள் ரகசியம் மிகவும் காக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி கார்த்திக் தெரிவித்துள்ளார்.
புகார் அளிக்க தொலைபேசி எண்கள் –
காவல் கட்டுப்பாட்டு அறை 04567 – 230904, 04567 – 230759.
ஹலோ போலீஸ் – 8300031100.
மாவட்ட தனிப்பிரிவு – 04567 – 290113, 9498101615.
ராமநாதபுரம் உட்கோட்டம் – 94981 01616.
பரமக்குடி உட்கோட்டம் – 94981 01617.
கமுதி உட்கோட்டம் – 94981 01618.
ராமேஸ்வரம் உட்கோட்டம் – 94981 01619.
கீழக்கரை உட்கோட்டம் 94981 01620.
திருவாடானை உட்கோட்டம் 94981 01621.
முதுகுளத்துர் உட்கோட்டம் – 04576 290208.