மதுரை: கடந்த 2015ஆம் ஆண்டு 15வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்ததாக தேனி மாவட்டம் சீப்பா லக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரரான பிரபு என்பவர் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடை சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் ராணுவ வீரருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை போக்சோ நீதிமன்ற நீதிபதி திருமதி.ராதிகா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ராணுவ வீரரின் தாய் கருப்பம்மாள் மற்றும் சிறுமியின் தந்தை பெத்தணசாமி ஆகிய இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் தண்டனை விதித்தும் உத்தரவில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்