ராணிப்பேட்டை : தமிழகத்தில் பரவி வரும் கொரானா இரண்டாம் அலைக்கு முற்றுப்புள்ளி வைத்திட தடுப்பூசி ஒன்றே மிகச் சிறந்த வழியாகும். இந்த கருத்தை பொது மக்களிடையே பரவலாக, வேகமாக, ஜனரஞ்சகமாக கொண்டு செல்ல மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் இரா. சிவகுமார் ஐபிஎஸ் அவர்கள் எழுதிய விழிப்புணர்வு பாடலுக்கு பிரபல பாடகர், இசையமைப்பாளர் திரு.கிருஷ் மற்றும் அவரது குழுவினர்கள் பாடியிருந்தனர்.
திரு.ராம் கோபி எடிட்டிங் செய்து இருந்தார். இதனை ஆற்காடு கனிஷ்கா கலெக்சன் திரு.எல்.ஆர் ஜெகதீசன் தயாரித்திருந்தார். இந்த தடுப்பூசி விழிப்புணர்வு பாடல் வெளியீடு இன்று 31. 5. 2021 நண்பகல் 12 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதை பாடகர் கிரிஷ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எல். ஆர். ஜெகதீசன் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்