ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மாஞ்சா நூலில் தயார் செய்யப்பட்ட காற்றாடிகள் பறக்கவிடுவதாக தகவல் கிடைத்தன. இதுபோன்ற செயல்களினால், சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் கழுத்தில் கண்ணாடி துகள்களால் தயார் செய்யப்பட்ட மாஞ்சா நூலில் சிக்கி காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே பொதுமக்கள் யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும், மீறி யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
மேலும் கடைகளில் யாரேனும் மாஞ்சா நூல் மற்றும் தயார் செய்ய பயன்படும் பொருட்களை விற்பனை செய்தால், அவர்களின் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், கடைகள் வைக்க ஏற்பாடு செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்