இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் நிகழும் முக்கிய சட்டம் – ஒழுங்கு பிரச்சனை, சட்ட விரோத செயல்கள், ( கஞ்சா, குட்கா , காட்டன், லாட்டரி , கள்ளச்சாராயம் விற்பனை செய்தல் மற்றும் மணல் கடத்தல் உள்ளிட்ட) ரவுடியிசம், காவல்துறை அதிகாரிகள் / ஆளிநர்கள் தொடர்பான லஞ்சம் மற்றும் ஒழுங்கீன நடவடிக்கைகள் குறித்த புகார்கள் எதுவாக இருந்தாலும் பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நேரடியாக தெரிவிக்க கீழ்க்கண்ட அலைபேசி எண்ணில் அழைத்தோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்பு எண் 7530026333
பொதுமக்களுக்கான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி தொடர்பு எண் அறிமுக நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபா சத்யன் இ. கா. ப., அவர்களால் இன்று ( 28.08.2021) காலை 11.00 மணியளவில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. தொடர்ந்து இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவிக்கையில் முக்கிய தகவல் அளிக்கப்படும் தகவலாளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பண வெகுமதி அளிக்கப்படும் என்றும், தகவல் அளிப்பவர்கள் பற்றிய விவரங்கள் இரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. P. முத்துக்கருப்பன் அவர்கள், இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி. K.T. பூரணி அவர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இராணிப்பேட்டை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்