ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டையில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய விழா 21, 22, 23 ஆகிய மூன்று நாட்கள் மிக சிறப்பாக நடைப்பெற்றது.
மூன்றாவது நாளான மயானக்கொள்ளை அரக்கோணத்தில் காலை முதல் மாலை வரை மிக சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு சுமார் 75 ஆயிரம் அதற்கு மேலாக பொது மக்கள் இந்த விழாவை காண கண்டுகளிக்க வருகை தந்திருந்தனர்.
இந்த விழாவிற்காக ராணிப்பேட்டை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் உத்தரவின் பேரில், அரக்கோணம் டிஎஸ்பி திரு.மனோகரன் தலைமையில், அரக்கோணம் டவுன் காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் மற்றும் அரக்கோணம் தாலுகா காவல் ஆய்வாளர் திரு.அண்ணாதுரை அவர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.கிருஷ்ணவேணி அவர்களும், சோளிங்கர் காவல் ஆய்வாளர் திரு.வெங்கடேசன் அவர்கள், பாணாவரம் காவல் ஆய்வாளார் பாரதி, காவேரிபாக்கம் காவல் ஆய்வாளர் திரு.லட்சுமிபதி மற்றும் உதவி ஆய்வாளர்கள் பணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இந்த விழாவிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இத்துடன் பொதுமக்களுக்கு எந்த அசம்பாவிமும் இல்லாமல், சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியாவை சேர்ந்த திரு.பாபு மற்றும் திரு.கஜேந்திரன் அவர்கள் காவல்துறையினருடன் இணைந்து மக்களை ஒழுங்குபடுத்தினர்.
இந்த வருடம் மிக அதிகமாகக் கூட்டம் கூடியது.
எந்த ஒரு சிறு அசம்பாவிதம் நடக்காமல் நேரடியாக டிஎஸ்பி திரு.மனோகரன் அவர்கள் களத்தில் இறங்கி மிக சீரும் சிறப்புமாக பணியாற்றினார். பொதுமக்கள் காவல்துறையினரை பாராட்டி பொன்னாடை போர்த்தி பாராட்டுக்களை தெரிவித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்