தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கவும், தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அரசு வழிகாட்டுதலின்படி வரும் 26.01.2022 அன்று இந்தியாவின் 73 வது குடியரசு தின விழா முன்னிட்டு பாதுகாப்பு குறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. தீபா சத்யன், இ.கா. ப., அவர்கள் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்காணிக்க காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையில் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும், தேசிய தலைவர்கள் சிலைகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரயில் நிலையங்களில் திறந்த பாதை ரோந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, முக்கிய நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, மாவட்டம் முழுவதும் 40 இடங்களில் வாகன தணிக்கை செய்யப்படும், மேலும் முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் மூலம் சோதனைகள் மேற்கொள்ளப்படும். குடியரசு தின விழா பாதுகாப்பிற்காக 2 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 15 ஆய்வாளர்கள், 52 உதவி ஆய்வாளர்கள் உள்பட 400 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு.கஜேந்திரன்
அரக்கோணம்