ராஜபாளையம்: தளவாய்புரம் காவல்நிலையம் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், அத்தியாவசியத் தேவை இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே செல்லக் கூடாது, முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது. பிரச்சாரத்தின் போது முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு இலவச முககவசம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிலாபுரம் அனைத்து வியாபாரிகள் சங்க செயல் தலைவர் லட்சுமணப்பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் சேகர், ராமநாதன், அஜித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.