விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சமூக இடைவெளி மற்றும் கரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனர்.
ராஜபாளையம் பகுதியில் தற்போது பொது முடக்கத்திலும் மக்கள் நடமாட்டம் வெளியில் அதிகமாக காணப்பட்டது.
இந்நிலையில், நகராட்சி ஆணையாளர் சுந்தரம்பாள் தலைமையிலான அதிகாரிகள் ராஜபாளையம் தென்காசி சாலை, ரயில்வே பீடர் சாலை, டி.பி.மில்ஸ் சாலை, பி. எஸ். கே நகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர். கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட அத்தியாவசமற்ற கடைகளுக்கு நகராட்சி ஆணையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் முன்னிலையில் 10 கடைகளுக்கு பூட்டி சீல் வைத்தனர்.
மேலும் ,சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை எனவும், கடையின் வாடிக்கையாளர் முக கவசம் அணியாமல் இருப்பது, கை கழுவும் கிருமி நாசினி மருந்து இல்லாமல் இருந்த கடை வியாபாரிகளுக்கு ரூ.7ஆயிரம் வரை நகராட்சி ஆணையாளர் அபராதம் விதித்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி