விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் ராஜபாளையம் தேர்தல் அதிகாரி கல்யாணகுமார் தலைமையில் ராஜநடை வட்டாட்சியர் ஸ்ரீதர் இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையில் திருமண மண்டபங்கள் வாடகை கார் ஓட்டுனர்கள் பிளக்ஸ் போர்டு மற்றும் அச்சகத்திற்கு தேர்தல் விதிமுறை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருமண மண்டபத்தில் முன்பதிவு செய்பவர்கள் உரிய ஆவணத்துடன் தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்று மண்டபம் முன்பதிவு செய்ய வேண்டும் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் அதேபோல், அரசுக்கு அரசியல் கட்சியினர் பரிசுப் பொருட்களை வழங்கினால் தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.
மேலும் , தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் பிரட்போர்டு அடிக்கும்போது கட்சியின் பெயர்கள் பயன்படுத்தாமல் பிளக்ஸ் போர்டுகள் அடுக்கி காட்டவேண்டும் அதேபோல் வாடகை கார் ஓட்டுனர்கள் தங்கள் வாகனத்தை யார் எதற்காக முன் பதிவு செய்கின்றனர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் உங்கள் வாகனத்தில் அனுமதியின்றி அரசியல் கட்சியினர் நோட்டீசு பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆகையால், மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என கார் ஓட்டுனர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் பிளக்ஸ் போர்டு உரிமையாளர்கள் திருமண மண்டபம் காவல்துறையினர் விளக்கம் அளித்து பேசினார் தேர்தல் அதிகாரி எடுக்கக்கூடிய கல்யாணகுமார் எந்த ஒரு அச்சமுமின்றி தகவல்களை எங்களிடம் தெரிவிக்கலாம்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி