திருவாரூர்: திருவாரூர் நகர காவல் சரக பகுதிகளில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த தியாகு (எ) தியாகராஜன் 21, பேபி டாக்கீஸ் ரோடு, திருவாரூர் என்ற ரவுடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் தனிப்படை அமைத்து கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரை மற்றும் அதிரடி நடவடிக்கையின்பேரில் தியாக (எ) தியாகராஜன் குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இதுபோன்று திருவாரூர் மாவட்டத்தில் யாரேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால்
அவர்கள் மீதும்,குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
திருவாரூரிலிருந்து குடியுரிமை நிருபர்
திரு.சகாயம் செபஸ்திக்கண்ணு