தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடி உட்பட 2 குற்றவாளிகள் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் நடவடிக்கை.
கடந்த 30.12.2022 அன்று திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் பகுதியிலுள்ள பைரவர் கோவிலின் முன்பு அக்கோயிலின் பூசாரியான பெருமாள் மகன் சரவணன் 34. மற்றும் கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் வெங்கடேஷ் 56. ஆகியோரை முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் அக்கோயிலில் தங்கி இருந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தியாகராஜன் மகன் சுரேஷ் 35. என்பவரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் குற்றவாளியான சுரேஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முரளிதரன் அவர்களும்,
கடந்த 07.11.2022 அன்று தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தட்டார்மடம் தாமரைமொழி பகுதியை சேர்ந்தவர்களான முத்துபாண்டி மகன் அருண் பாண்டி 22. மற்றும் சுப்பையா மகன் சீனி 28. ஆகியோரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டு மேற்படி அருண் பாண்டியின் இருசக்கர வாகனத்தையும் திருடி சென்ற வழக்கில் குலசேகரன்பட்டினம், உடன்குடி, தேரியூர் பகுதியை சேர்ந்த ஜெயபாண்டி மகன் சரத்குமார் 28. மற்றும் சிலரை தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
மேற்படி இவ்வழக்கின் குற்றவாளியான சரத்குமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பவுலோஸ் அவர்களும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் திருச்செந்தூர் பைரவர் கோயிலில் தங்கி இருந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தியாகராஜன் மகன் 1) சுரேஷ் மற்றும் குலசேகரன்பட்டினம் உடன்குடி தேரியூர் பகுதியை சேர்ந்த ஜெயபாண்டி மகன் 2) சரத்குமார் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி 2 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.