காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று திருமதி.சண்முகப்பிரியா பொறுப்பேற்றுக்கொண்டார். நோய் பரவலை தடுக்க வீட்டை விட்டு வெளியே வரும்போது, கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். முழு ஊரடங்கி போது, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
மேலும் பொதுமக்கள் அனைவரும் காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடக்கும் காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.