திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு போக்கிரி பதிவேடு துவங்கி கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதில் குற்றச்செயல்களில் ஈடுபடாமல்,கெட்ட நடத்தைக்காரர்களிடம் தொடர்பு இல்லாமல், கடந்த 3 ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் இல்லாமல் இருந்துவரும் 51 போக்கிரி பதிவேடு ரவுடிகளுக்கு அவர்களது நன்னடத்தை காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் சட்டரீதியாக போக்கிரி பதிவேடு முடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய ரவுடிகளை திருவாருர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் C.விஜயகுமார் IPS அவர்கள் இன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அவர்களது குடும்ப சூழ்நிலை மற்றும் நன்னடத்தை ஆகியவற்றை கருத்தில் கொண்டு திருந்தி வாழ
வாய்ப்பளித்து மனிதநேயத்துடன் நல்வாழ்வு வாழ அறிவுரை வழங்கினார்கள். மேலும்
அனைவரையும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும், இத்தகைய அரிய வாய்ப்பை மீறி யாரேனும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு போக்கிரி பதிவேடு துவங்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்து அவர்களை அனுப்பிவைத்தார்கள்.
திருவாரூரிலிருந்து
நேசராஜன்