ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இன்று 20.08.2021 அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு ஆய்வாளர் திருமதி.விஜயலட்சுமி அரக்கோணம் ரயில் பயணிகளுக்கு கொரோனா நோய் சம்பந்தமாக விழிப்புணர்வு முகாம் நடத்தினர். முகாமில் பயணிகளுக்குதுண்டுபிரசுரம் கொடுத்தும், மாஸ்க், சானிடைசர், வழங்கியும், சோப்பு போட்டு அடிக்கடி கைகளை கழுவுவது பற்றியும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது பற்றியும் அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் 200 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் தற்காப்பு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு.கஜேந்திரன்
இராணிப்பேட்டை மாவட்ட பொது செயலாளர் -ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
அரக்கோணம்