மதுரை : செங்கோட்டை – சென்னை செல்லக்கூடிய பொதிகை அதிவிரைவு ரயிலில் மதுபோதையில் பயணிகளிடம் தகராறு செய்த புகாரின் அடிப்படையில் ஆயுதப்படை காவலரை, ரயில்வே காவல்துறையினர் மதுரை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு அபராதம் விதித்துள்ளனர்.செங்கோட்டை – சென்னை செல்லக்கூடிய பொதிகை அதிவிரைவு ரயிலில் நேற்றிரவு தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான சுப்பையா பாண்டியன் (31). மற்றும் அவரது நண்பரான பாலமுருகன் (31). என்பவர் சங்கரகோவில் ரயில் நிலையத்தில் ஏறியுள்ளனர். இதில் ,பாலமுருகன் என்பவர் ரயில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாகவும், டிக்கெட் கேட்டு வந்த டிக்கட் பரிசோத ரிடமும், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவரை விருதுநகரில் இறக்கி விட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ஆயுதப்படை காவலர் சுப்பையா பாண்டியன் மதுபோதையில் ரயில் பயணிகளிடமும், ரயில்வே காவல்துறையினரிடம் தகராறு செய்ததாக கூறப்படும் நிலையில், அங்கிருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு ரயில்வே காவல்துறையினருக்கு புகார் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், மதுரை ரயில்வே காவல்துறையினர் மதுரை ரயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டு பரிசோதனை மேற்கொண்டதில் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டு அபராதம் விதித்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி