வேலூர் : வேலூர் காட்பாடி மைசூருவில் இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காட்பாடி ரெயில் நிலையம் வந்தது. அப்போது அந்த ரெயிலில் இருந்து இறங்கி சந்தேகப்படும் வகையில் சென்ற பெண்ணை காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், மற்றும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த (35), வயது பெண் என்றும் அவர் பயணிகளிடம் 8¼ பவுன் நகைகளை திருடி பையில் வைத்திருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 8¼ பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்