திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே மீஞ்சூர் – காட்டூர் சாலையில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் கட்டும் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதனால் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது நேரம் விரயம் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் அவசர சிகிச்சைக்கு செல்ல முடியாமல் பல நேரங்களில் உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் காங்கிரஸ் M.P ஜெயக்குமார், பொன்னேரி காங்கிரஸ் M.L.A துரை.சந்திரசேகர் ஆகியோர் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். இணைப்புப்பாலம் பணிகள் கிடப்பில் உள்ளதற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து மேம்பாலப் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கிடப்பில் போடப்பட்ட மேம்பாலப் பணிகள் பிப்பரவரியில் தொடங்கிட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு