சென்னை: சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தில் நேற்று வணிக வரித்துறை அதிகாரிகள் சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹன்ஸ், பாக்கு உள்ளிட்ட பொருட்கள் 4 டன்னுக்கும் அதிகமான அளவில் ரயிலில் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதுமட்டுமின்றி உரிய ஆவணங்கள் இன்றி பல லட்சம் மதிப்புடைய மின்சார பொருட்கள் மற்றும் செல்போன்கள் உணவு பொருட்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
அனைத்து பொருட்களையும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களையும் வாகனங்களில் ஏற்றி கிரீம்ஸ் ரோடு சாலையில் அமைந்துள்ள வணிகவரி துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
தடை செய்யப்பட்ட குட்கா, ஹன்ஸ், பாக்கு உள்ளிட்ட போதைப் பொருட்களை கொண்டு வந்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.