திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் திருச்சி சென்னை மார்க்கமாகவும் ,சேலம் மார்க்கமாகவும், பழனி மார்க்கமாகவும் ஒரு நாளைக்கு 90 ரயில்கள் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து செல்கிறது.
இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு போலீசாரும் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் தண்டவாளங்களில் சிலர் தற்கொலைகளும் நடக்கின்றன. பலர் ரயிலில் அடிபட்டு இறந்து விடுகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ரயில்வே தண்டவாளங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் 16 பேர் இறந்தவர்களின் அடையாளங்கள் தெரியாமலே உள்ளன. அவர்களின் உடல்களை எடுத்து போலீசார் முறைப்படி பிரேத பரிசோதனை செய்து கோவிந்தபுரம் சுடுகாட்டில் புதைத்து விட்டனர்.
அவர்களுடைய பெயர் முகவரி தெரியாததால் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. இறந்த இந்த 16 பேரின் குறித்து விவரங்களை சேகரிக்கும் மாறும் திண்டுக்கல் ரயில்வே போலீசார் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்துள்ளனர் .இந்த படையினர் தொடர்ந்து இறந்தவர்களின் தொடர்பாக படங்கள், அவர்களின் உடைகளை வைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.