தூத்துகுடியில்: தூத்துகுடியில் ஆன்லைனில் ரம்மி விளையாட பணம் தராததால் பட்டாதாரி இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துகுடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலேடை கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி-கீதா தம்பதிக்கு, விக்னேஷ், பிராகாஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்தமகன் விக்னேஷ் கோவையில் உள்ள தனியார் நிருவனத்தில் பணியாற்றி வருகிறார். இளையவர் பிரகாஷ் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் முடித்த பட்டதாரி. படிப்பிற்கு ஏற்ற வேலை தேடி வந்த அவர், தனது தந்தையுடன் சென்டிரிங் வேலைக்கும் சென்றுள்ளர்.
எப்போதும் செல்ஃபோனும் கையுமாக இருந்த பிரகாஷ், அவ்வப்போது அப்பா, அம்மா, அண்ணனிடம் பணம் வாங்கிவந்துள்ளார். இண்டர்வியூக்கு செல்ல வேண்டும், கோச்சிங் கிளாஸ் சேர வேண்டும் என ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி பணம் வாகியிருக்கிறார். அதோடு சென்டிரிங் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தினையும் வீட்டிற்கு தரமால் இருந்துள்ளார்.
இது தவிர வீட்டில் இருந்த பணத்தினையும் யாரூக்கும் தெரியமால் எடுத்திருக்கிறார். இந்தச் சூழலில் தான் பிரகாஷ் கடந்த 25ந்தேதி தனக்கு உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என தாய் கீதாவிடம் கேட்டுள்ளார். அப்போது அடிக்கடி பணம் வாங்கிக்கொண்டிருக்கிறாய், வாங்கும் பணத்தை என்ன செய்தாய் என கேட்டுள்ளனர்.
எந்த கோச்சிங் கிளாஸிலும் சேரவில்லை, சம்பாதிக்கும் பணத்தையும் வீட்டிற்கு கொடுப்பத்தில்லை எனத்திட்டி, இனி பணம் இல்லை என கூறியிருக்கின்றனர். இதனால் மனமுடைந்த பிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.
தூக்கிட்டு பிரகாஷ் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்த பெற்றோர் அவரை உடனடியாக காப்பாற்றி, தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பலன் இல்லாமம் உயிரிழந்தார்.