பெரம்பலூர்: பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய குருதி தேவைப்படுவதாக சமூக வலைதளங்களில் குருஞ்செய்தி வந்தது.
இதனை பார்த்த பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் திரு. ஸ்ரீதர் பெரம்பலூர் தனியார் மருத்துவமனைக்கு சென்று மேற்படி நபரை சந்தித்து ஆறுதல் கூறியும் ,ரத்த வங்கிற்கு சென்று மேற்படி நபரின் பெயரில் தனது ரத்தம் தானம் செய்தார்.
மேற்படி காவலரின் செய்கையினை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) திரு.K.பெரோஸ்கான் அப்துல்லா பெரிதும் பாராட்டினார்