திருச்சி: திருச்சி, நவல்பட்டு காவல் பயிற்சிப் பள்ளியில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவர் காவலர் அரவிந்த். இவர் 18 வயது முதல் தற்போது வரை வருடத்திற்கு நான்கு முறை என 56 முறை தொடர்ந்து ரத்த தானம் செய்துள்ளார் . மேலும் இவர் கடந்த நான்கு வருடமாக ரத்ததான தன்னார்வலர்களை ஒன்றிணைத்து சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் ரத்த தானம் செய்து சிறந்த சமூக சேவைகளைச் செய்து வருகின்றனர். இவர் செய்து வரும் சமூக சேவையை பாராட்டும் விதமாக தேசம் காப்போம் அறக்கட்டளை யிடம் இருந்து தொடர் ரத்த தானம் கொடை வள்ளல் விருது காவலர் அரவிந்த் க்கு வழங்கப்பட்டது.இந்த விருதினை நவல்பட்டு காவல் பயிற்சிப் பள்ளி முதல்வர் உயர்திரு முத்துக்கருப்பன் ADSP , மனோகரன் DSP மற்றும் சலீம்-ஜாவித் ஆய்வாளர் அவர்கள் கவாத்து மைதானத்தில் பயிற்சி காவலர்கள் முன்பு வழங்கி கௌர வித்துள்ளனர்.