தென்காசி : தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடங்கநேரி பகுதியில் சமுத்திரகனி என்பவர் முருகேசன் என்பவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார், இதில் முருகேசன் என்பவருக்கும் சேர்மம் என்பவருக்கும் ஊரில் யார் பெரியவர் என்று முன்பகை இருந்து வந்துள்ளது.
இச்சமயத்தில் சமுத்திரக்கனி, முருகேசன் உடன் ஊரில் ஒன்றாக சுற்றித் திரிவதால் இது பிடிக்காத சேர்மம் மற்றும் சிவன்ராஜ் ஆகியோர் இணைந்து அரிவாளால் சமுத்திரக்கனியை தாக்கியுள்ளனர். இதுகுறித்து சமுத்திரக்கனி கொடுத்4த புகாரின் பெயரில் காவல் ஆய்வாளர் திருமதி. தனலட்சுமி அவர்கள் விசாரணை மேற்கொண்டு சேர்மம் மற்றும் சிவன்ராஜ் ஆகிய 02 நபர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தார்.