விழுப்புரம் : விழுப்புரம் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 6-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் தீபத்திருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையிலும், ஏதேனும் நாசவேலைகள் நடைபெறாத வண்ணம் இருக்கவும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் உள்ள பஸ், ரெயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட்டுகள், கடை வீதிகள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பொதுமக்களின் உடைமைகள் மற்றும் பார்சல் பொருட்களை மெட்டல் டிடெக்டர் கருவியின் மூலம், மோப்ப நாய் உதவியுடனும் போலீசார், தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர்.