சென்னை : சென்னை சுதந்திர தினத்தையொட்டி, சென்னை சென்டிரல் ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில், 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. ரெயில்வே காவல்துறையினர் ,மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் தொடர்ந்து இருந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மாம்பலம் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை காவல்ஆய்வாளர் திரு. பர்சா பிரவீன், தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் சிறப்பு பாதுகாப்பு சோதனை நடத்தினர். அதில் காவல்துறையினர், மெட்டல் டிடெக்டர் மற்றும் ‘டைசன்’ என்ற மோப்பநாய் உதவியுடன் ரெயில் பயணிகளின் உடைமைகளையும் பாதுகாப்பு கருதி சோதனையிட்டனர். இதேபோல் அனைத்து ரெயில் நிலையங்களிலும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆங்காங்கே சோதனைகளும் நடைபெற்றன.