திருவாரூர்: திருவாரூர் நகர காவல் சரகத்திற்குட்பட்ட நாகை பைப்பாஸ் ரோடு பகுதியில் இயங்கி வரும் அபி & அபி மோட்டார் நிறுவனத்தில், குடவாசல் தாலுக்கா, சேங்காலிபுரம் ரோடு, பெருங்குடி தோப்பு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சரவணகுமார் -39. .என்பவர் கிளை பொறுப்பாளர் மற்றும் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
மேற்படி நபர் வாடிக்கையாளர்கள் 47 நபர்களிடம் வண்டி விற்பானை செய்த பணத்தில் கம்பெனி இரசீதில் ஒருதொகையும், நிறுவன கணக்கு புத்தக இரசீதில் மாறுபட்ட தொகையை பதிவு செய்து ரூ.21,74,090/- கையாடல் செய்து, அதில் ரூ.2,26,000/- திரும்ப செலுத்தியும், மீதத்தொகை ரூ.19,48,090/- திரும்ப செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அபி & அபி மோட்டார் நிறுவன மேலாளர் புகார் மனு கொடுத்துள்ளார்.
மாவட்ட காவல் கண்காணிபாளர் அவர்கள் உத்தரவின் பேரில் திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு நம்பிக்கை மோசடி செய்து பணத்தை கையாடல் செய்த குடவாசல் தாலுக்கா, சேங்காலிபுரம் ரோடு, பெருங்குடி தோப்பு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சரவணகுமார் -39. என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறப்பாக செயல்பட்டு பணத்தை கையாடல் செய்த நபரை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ரெங்கராஜன் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc, (Agri)., அவர்கள் பாராட்டினார்கள்.
பொதுமக்களை ஏமாற்றி பணத்தை பெற்று கொண்டு மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc.,(Agri)., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.