திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சென்ற போது சோகம். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த கருணாநிதி மகன் சந்தோஷ் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் கோகுல கண்ணன் இவர்கள் இருவரும் சக நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் கொடைக்கானல் செல்வதற்காக திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலையில் வந்து கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை சந்தோஷ் ஓட்டிவர கோகுல கண்ணன் பின்புறம் அமர்ந்து இருந்தார். இந்நிலையில் வக்கம் பட்டி ஆரியநல்லூர் பிரிவு அருகே வந்த போது நிலைதடுமாறி கிழே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து இருவரும் கீழே விழுந்ததில் பழத்த காயம் அடைந்த கல்லூரி மாணவர் சந்தோஷ் பலியானார்.
இச்சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர்.சந்திர மோகன்,சார்பு ஆய்வாளர். பிரபாகரன் ஆகியோர் தலைமை காவலர்கள். அருளானந்து, நல்லுசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.