கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டியிருந்த போது மது குற்றங்களில் கைப்பற்றப்பட்ட இரண்டு, மூன்று, நான்கு சக்கரம் மற்றும் ஆறு சக்கர வாகனம் ஆகியவற்றினை தானியங்கி பொறியாளர் மோட்டார் வாகன பராமரிப்புத்துறை, தருமபுரி என்பவர் மூலமாக ஆய்வு செய்யப்பட்டு, மேற்படி வாகனங்களின் தற்போதைய மதிப்பு நிர்ணயம் செய்தும் அறிக்கை பெறப்பட்டுள்ளது. எனவே, ஓசூர் காவல் கண்காணிப்பாளர் வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 106 இரண்டு, மூன்று, நான்கு சக்கரம் மற்றும் ஆறு சக்கர வாகனம் ஆகிய வாகனங்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு குறையாமல் பொது ஏலம் விட முடிவெடுக்கப்பட்டுள்ளதையடுத்து, மேற்படி வாகனங்களை (30. 09. 2023) அன்றைய தினம் காலை 11.00 மணிக்கு, ஒசூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகம் மற்றும் கிருஷ்ணகிரி ஆயுதபடை வளாகம் ஆகிய இரண்டு இடங்களில் பொது ஏலம் விடப்படுகிறது. இந்நேர்வில் பொதுமக்கள் மேற்படி பொது ஏலத்தில் கலந்துக்கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கே. எம். சரயு இ. ஆ. ப., தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்