கோவை :கோவையில் இருந்து கேரளா கொண்டு சென்ற மோட்டார் உதிரி பாகங்கள் காருடன் கடத்திய மர்ம கும்பலை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் சந்திரன். இவர் மோட்டர் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை சுமார் 50 ஆயிரம் மதிப்பிளான மோட்டார் உதிரி பாகங்களை தனது காரில் எடுத்துக்கொண்டு கேரளாவை நோக்கி சென்றுள்ளார். அப்போது தமிழக கேரளா எல்லையான வாளையார் அருகே போனபோது பின் தொடர்ந்து வந்த 2 கார்களில் வந்த மர்ம நபர்கள் காரில் வந்த சந்திரன் மற்றும் ஓட்டுநர் லோகநாதனை தாக்கி விட்டு காருடன் மோட்டார் உதிரி பாகங்களை திருடி சென்றனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வேல்முருகன் விசாரணை மேற்கொண்டு, 10 பேர் கொண்ட மூன்று தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்