திருவண்ணாமலை: திருவண்ணாமலைமாவட்டம்,ஆரணி அடுத்த திருமணி பகுதியில் நேற்று பெரணமல்லூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படி இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஆகாரம் பகுதியைச் சேர்ந்த அசோக்19 என்பதும்,மெக்கானிக்காக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
மேலும் அவர் முணுக்கப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல் ஆய்வாளர் திருமதி.கோமளவல்லி வழக்குப் பதிந்து அசோக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்த 3 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டனர்.