கோவை : கோவையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ரஞ்சித் குமார் என்பவர் தனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்து விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண்கள் 13/2023 u/s 419, 420 IPC & 66D IT Act ல் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை மேற்க்கொண்டு காவல் -ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் அவர்களின் வழிக்காட்டுதலின்படி வழக்கின் குற்றவாளியான பாலமுருகன் (30), S/o சோமசுந்தரம், No2, 1st Cross First Street, Near Ujala Factory, ஹோசப்பாளையம் ரோடு, பெங்களூர் – 560068. என்பவரை (28.03.2023) காவல் ஆய்வாளர் திரு P.A. அருண், உதவி ஆய்வாளர்கள் திரு. சிவராஜ், திரு.தாமரை கண்ணன் மற்றும் சைபர் கிரைம் ஆளினர்களுடன் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி குற்றவாளியான பாலமுருகன் போலியான ஆவணங்களை தயாரித்து அதன் மூலம் மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு வழக்கில் தொடர்புடைய மொபைல் போன்கள் மின்னணு சாதனங்கள் பல்வேறு 21 சிம்கார்டுகள், Visiting Cards, மற்றும் ஆவணங்கள் ஆகியவை குற்றவாளிடமிருந்து பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேற்படி இது போன்று யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும்மாறு அறிவுருத்தப்படுகிறது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்