தூத்துக்குடி : தூத்துக்குடியில், கோவில்பட்டி இந்திரா நகரை சேர்ந்த கார்த்திக் என்பவரது செல்போனிற்கு கடந்த 02.03.2023 அன்று வந்த குறுஞ்செய்தியில் உள்ள Rewards PointRedeem செய்தவதற்கான லிங்க்கை கார்த்திக் கிளிக் செய்து அதில் வந்த போலியான இணையதளத்தில் தனது கிரெடிட் கார்டு விபரங்கள், கடவுச்சொல் மற்றும் OTP ஆகியவற்றை பதிவு செய்தபோது, கார்த்திக்கின் கிரெடிட் கார்டு கணக்கிலிருந்து ரூபாய் 2,78,500/- பணம் மோசடியாக எடுக்கப்பட்டதாக மேற்படி கார்த்திக் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதேபோன்று கடந்த (09.05.2022), அன்று விளாத்திகுளம் தெற்கு தெருவை சேர்ந்த நாகு மகன் சங்கர் என்பவரது முகநூல் பக்கத்தில் வந்த வெளிநாட்டில் வேலை வாய்ப்பு உள்ளதாக விளம்பரத்தை பார்த்து அதிலுள்ள எண்ணை தொடர்புகொண்டு வேலைக்காக ரூபாய் 40,000/- பணம் அனுப்பியுள்ளார். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சங்கர் அளித்த புகாரின்பேரில் தூத்துக்கு சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் தூத்துக்குடி அசோக் நகரை சேர்ந்த பன்வாரிலால் சர்மா மகன் சுசில்குமார் சர்மா என்பவரது வங்கி கிரெடிட் கார்டு கணக்கிலிருந்து சுசில்குமார் சர்மாவின் அனுமதியின்றி பல தவணைகளாக மொத்தம் ரூபாய் 1,48,999/- எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்தததையடுத்து மேற்படி சுசில்குமார் சர்மா அளித்த புகாரின்பேரில் தூத்துக்கு சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேற்படி சைபர் குற்ற சம்பவங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. கார்த்திகேயன் அவர்கள் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு. சிவசங்கரன் தலைமையிலான போலீசார் தொழில்நுட்பரீதியாக விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு, மோசடி செய்யப்பட்ட மொத்தம் ரூபாய் 4,67,499/- பணம் மீட்கப்பட்டது.
மேற்படி மீட்கப்பட்ட ரூபாய் 4,67,499/- பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி (21.03.2023) சைபர் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் வைத்து சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. கார்த்திகேயன் அவர்கள் மேற்படி பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்தார்.பொதுமக்கள் செல்போனில் தெரியாத எண்ணிலிருந்து வரும் வங்கி SMS அல்லது வாட்ஸ்ஆப்பில் இருக்கும் எந்தவித லிங்குளையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், அதில் உங்கள் வங்கி விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டாம் என்றும், பணபரிவர்த்தனைகளை செய்யும் போது சம்பந்தப்பட்ட வங்கியின் உண்மையான இணையதளமா என்பதை உறுதி செய்த பின்னர் பயன்படுத்த வேண்டும் என்றும், பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் இணையதளத்தில் வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் கப்பல்களில் வேலைவாய்ப்பு போன்ற விளம்பரங்களை பார்த்து முகம் தெரியாத நபர்களுக்கு பணம் அனுப்பி ஏமாறவேண்டாம் என்றும், பொதுமக்கள் இதுபோன்ற சைபர் குற்றங்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்அவர்கள் அறிவுரைகள் வழங்கினார்.