குமரி: குமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் ஜெபமணி(62) . இவர் அந்த பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.
அப்போது அவர் கடைக்கு வந்த மணிகண்டன் (43) , மற்றும் ஜான் (38) ஆகியோர் ஜெபமணியிடம் பழக்கம் ஏற்படுத்தி தங்களிடம் ஹவாலா பணம் இருப்பதாகவும் ஒன்றுக்கு இரு மடங்காக தருவதாக ஆசைவார்த்தை ஜெபமணி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து 18 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர் .
பணத்தை கொண்டு வரும்போது போலீஸ் கெடுபிடி அதிகமாக உள்ளது என ரூபாயை வாங்கிவிட்டு ஏமாற்றியுள்ளனர் பின்பு 40 லட்சம் பணம் தாருங்கள் மொத்தம் 1 கோடியாக திருப்பி தருகிறோம் என மணிகண்டன்மற்றும் ஜாண் மீண்டும் ஜெபமணியிடம் கூறியுள்ளனர் . சந்தேமடைந்த ஜெபமணி மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார் . அவரது உத்தரவின் பேரில் தக்கலை உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சிவசங்கர் மற்றும் காவலர்கள் , மார்த்தாண்டம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்வேல் குமார் ஆகியோர் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஜெபமணியிடம் பணத்தை தருகிறோம் என கூறி குற்றவாளிகளை இருவரையும் வரவழைத்து சிராயன்குழி பகுதியில் வைத்து மணிகண்டன் மற்றும் ஜானை பிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர் . விரைந்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி வெகுவாக பாராட்டினார்.