கோவை : ஈரோடு பெருந்துறை குயின் ஈமு பார்ம்ஸ் என்ற நிறுவனமானது பொதுமக்களிடம் ஈமு கோழிகள் மீது முதலீடு செய்யும் பணத்திற்கு அதிகமான தொகை திரும்ப கிடைக்கும் என்ற பொய்யான வாக்குறுதி கொடுத்து பல முதலீட்டாளர்களுக்கு திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளது இது சம்பந்தமாக கோவை பொருளாதாரக் குற்றபிரிவு மற்றும் ஈரோடு பொருளாதாரக் குற்றபிரிவு மற்றும் ஈரோடு பொருளாதார குற்றபிரிவில் 2012 ஆம் ஆண்டில் வழக்குப்பதிவ செய்யப்பட்டு கேவையில் 306 முதலீட்டாளர்களிடம் ரூ. 5,65,83,840/- மற்றும் ஈரோட்டில் 829 முதலீட்டாளர்களிடம் ரூ. 26,68,48,000/- ஏமாற்றப்பட்டதாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இருவழக்குகளிலும் (18.02.2023) அன்று கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மேற்படி தீர்ப்பில் 2 வழக்குகளிலும் குற்றவாளிகள் மயில்சாமி மற்றும் சக்திவேல் இருவருக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் கோவை வழக்கில் ரூ.5,68,48,000/- அபராதமும் ஈரோடு வழக்கில் ரூ.28,72,32,000/- அபராதமும் வழங்கப்பட்டது. அபராதத்தொகைகளை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பிரித்து கொடுக்கபடவுள்ளது இவ்வழக்கை திறம்பட விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பை மீட்டு தந்த காவல் கண்காணிப்பாளர் திரு. பாலாஜி சரவணன், உள்ளிட்ட காவல் அலுவலர்களை டி.ஜி.பி திரு. சைலேந்திர பாபு இ.கா.ப நேரில் அழைத்து பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்