திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, கீராளத்தூர், திருக்கொள்ளிக்காடு, மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ஹனிபா மகன் யூசப் ரஹுமான் (வயது-28). என்பவரின் கைபேசிக்கு Part Time Job தொடர்பான Website Link வந்துள்ளது. அந்த Link-ல் சென்று பார்த்த போது அதில் Telegram Group-ல் இணைய ஒரு link வந்துள்ளது. அதில் சென்று பார்த்த போது வங்கி விபரங்களை பதிவிட கூறியதால் பதிவு செய்ததாகவும், அந்த நிறுவனத்தின் பெயர் Sky Scanner என வந்ததாகவும், அதிலிருந்து Task அனுப்பி Flight Ticket Rating கொடுக்க, பணம் செலுத்துமாறு கூறியதாகவும், தொடர்ந்து பல Task-களை அனுப்பி, Task முடித்தால் தான் பணம் கிடைக்கும் என கூறி பல தவணைகளில் ரூபாய்.13,79,516/-ஐ பெற்று மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்தார்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc, (Agri)., அவர்கள் மேற்படி புகாரின் மீது வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்ய திருவாரூர் மாவட்ட Cyber Crime காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்து புகார்தாரர் அளித்த குற்றவாளிகளின் வங்கி கணக்கு, பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் மோசடியில் ஈடுபட்ட குஜராத் மாநிலம், சூரத், வர்ச்சா ரோடு, மகாதேவ் நகரை சேர்ந்த சந்ரேஸ்பாய் ராவிஜிபு மகன் ஜெய் சவாளியா (வயது-24). மற்றும் அசோக் பாய் மகன் மில்லப் தாக்கர் (வயது-22). ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறப்பாக செயல்பட்டு Online மூலம் மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த இருவரை கைது செய்த திருவாரூர் மாவட்ட Cyber Crime காவல் ஆய்வாளர் திருமதி.T.ஸ்ரீபிரியா மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc, (Agri)., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். தெரியாத நபர்கள் அனுப்பும் எந்தவொரு Link-களையும் தொட வேண்டாம், வங்கி விபரங்கள் மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பான OTP-யை பிறருடன் பகிர கூடாதென்றும், பிறர் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும், சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டதாக அறிந்தால் உடனடியாக 1930 என்ற உதவி எண் மற்றும் www.cybercrime.gov.in -ல் புகார் அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc, (Agri)., அவர்கள் தெரிவித்தார்கள்.