கோவை : கோவை சேர்ந்த கண்ணன் என்பவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், அவரிடம் கொடுத்த புகாரில் நான் மகாலட்சுமி ஏஜென்சிஸ் என்ற நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வருவதாகவும் தாங்கள் நிறுவனத்தின் G.S.T என்னை யாரோ தவறாக பயன்படுத்தி பணம் பெற்று மோசடி செய்து விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை ஆணையாளர் உத்தரவின் பெயரில் காவல்துறை துணை ஆணையாளர் வழிகாட்டுதலின்படி சைபர் க்ரைம் ஆய்வாளர் அருண் உதவி ஆய்வாளர்கள் சிவகுமார் சிவராஜ் பாண்டியன், மற்றும் சைபர் கிரைம் காவலர்களுடன் விசாரணை மேற்கொண்டதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவரை கைது செய்து விசாரணை செய்த போது அவர் போலியான ஆவணங்களை தயாரித்து அதன் மூலம் மோசடி ஈடுபட்ட குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த மொபைல் போன்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பல்வேறு சிம் கார்டுகள் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் உள்ள விசிட்டிங் கார்டு,சுமார் 1500 போலி ரூபாய் நோட்டுக்கள் மற்றும் பிரிண்டர் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு கைதி அனுப்பி வைக்கப்பட்டார். பின்பு சைபர் கிரைம் ஆய்வாளர் அருண் அவர்கள் இதுபோன்று பொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டு இருந்தால் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு கூறினார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்