கோயம்புத்தூர் : மதுக்கரை ரோடு சீனிவாசா நகர் பகுதியைச் சேர்ந்த முத்தையன் என்பவரின் மகன் பாலச்சந்திரன் (40). இவர் கோவை சிறுவாணி சாலையில் காளம் பாளையம் பகுதியில் மொபைல் போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது கடைக்கு அருகில் உள்ள டீக்கடைக்காரர் மொபைல்போன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக பாலச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு சென்ற பாலச்சந்திரன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்த பொழுது 50 புதிய மொபைல் போன்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் பேரூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின்பேரில் பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பாலச்சந்திரனை மொபைல் போன் கடையில் இருந்து மொபைல் போன்களை திருடிச் சென்ற நபர்கள் அடையாளம் தெரிந்தது. ராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் என்பவரின் மகன் அப்துல் ரியாஸ்கான் (38)என்பதும் மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த முகமது லாசர் (34) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் ராமநாதபுரம் பகுதிக்குச் சென்றது. அங்கு மறைந்திருந்த அப்துல் ரியாஸ் கானை கைது செய்து அவரிடம் இருந்த 50 மொபைல் போனை பறிமுதல் செய்தனர் .மேலும் தப்பிச்சென்ற முகமது அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்
நமது குடியுரிமை நிருபர்
![](https://34.68.197.11/wp-content/uploads/gokul.png)