விருதுநகர்: மொபைல் போன்கள் காணாமல் போனதாக கொடுத்த புகார்களை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு.மனோகர், IPS., அவர்கள் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு. ஆ.மணிவண்ணன் அவர்கள் அறிவுரையின்படி விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சுமார் 1,50,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.