மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட மேல அனுப்பானடி பகுதியில் ராஜமான் நகர் கண்மாய் கரையோரம் பகுதியில் நேற்று அவனியாபுரம் சார்பு ஆய்வாளர் அதிகுந்த கண்ணன் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் உள்ள முட்புதரில் பதுங்கி இருந்த 4 பேர் போலீசார் வருவதை கண்டு ஓட்டம் பிடித்தனர். நால்வரில் ஒருவர் தப்பி ஓடிவிட மூவரை மடக்கிப் பிடித்த போலீசார் மூவரையும் பிடித்து விசாரணை செய்தனர்.
தற்போது முழுஊரடங்கு வருவதால் கஞ்சா விற்பனையில் அந்த இளைஞர்கள் ஈடுபட முயன்றது குறித்து போலீசாரிடம் கூறியுள்ளனர்.
மேலும், விற்பனைக்காக வைத்திருந்த பத்து கிலோ கஞ்சாவை பொட்டலங்களாக மடித்து வைத்திருந்ததை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து அவனியாபுரம் காவல்நிலையம் அழைத்து சென்று மூவரையும் விசாரணை செய்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் விற்பனையில் ஈடுபட இருந்தது வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார்-(24), மேலஅனுப்பானடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்ற கஜினி-(27), கட்டாரி என்கின்ற திருமுருகன்-(27) மற்றும் தப்பி ஓடியவர் பெரியண்ணா குமார் என்றும் விசாரணையில்தெரிய வந்தது.
மேலும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்த கஞ்சாவை எங்கிருந்து வந்தது என்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் , தப்பி ஓடிய பெரியண்ணா (எ) குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி