செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.மேல்மருவத்தூர் அருகிலுள்ள சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் இருந்து வந்தவாசி சாலை ஆதிபராசக்தி தனியார் கல்லூரி ஆர்ச் வரை இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) வீரர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வு ஏற்படும் வகையில் அணிவகுத்துச் சென்றனர். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்
















