செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி செங்கல்பட்டு மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயகுமார் அவர்கள் தலைமையில் போதைபொருள் மனித உயிருக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து பாலூர் ஆதிதிராவிடர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய போட்டி வைத்து போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேசிய பின் அனைவருக்கும் பேனா பென்சில் டிபன் பாக்ஸ் பரிசு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பாலூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் முகன் . நிலைய எழுத்தர் வெங்கடேசன் . தலைமை காவலர் ராஜேஷ் . பாலசுப்ரமணியன் இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் காமராஜ் மற்றும் ஆசிரியர்கள் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்
















